அரசியல் வேண்டாம் என்று செல்லும் நடிகர்களைக்கூட அரசியலுக்கு இழுத்து விடும் வேலை நடக்கிறது. சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறிய தாக ஒரு விஷயத்தைச் சிலர் நெட்டில் தவழ விட்டனர் அதைக்கண்டும் காணாமலிருந்த விஜய் சேதுபதி போடா போடா போய் வேலைய பாருங்கடா என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
தக்க சமயம் பார்த்து பதில் தர முடிவு செய்திருந்த வருக்கு சரியான மேடையாக அமைந்தது மாஸ்டர் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி. அங்குப் பேசும்போது மாஸ்டர் படத்தைப் பற்றி பேசிவிட்டு கடவுள் காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் சுற்றுகிறது. கடவுளைக் கடவுளே காப்பாற்றிக்கொள்வார் யாரும் காப்பாற்ற வேண்டியதில்லை. அந்த கூட்டத்திடம் பேசாமல் ஒதுங்கி இருங்கள் என்றார். . மதத்தைச் சொல்லி கடவுளைப் பிரிக்கப் பார்க்கிறார்கள். மனிதனுக்கும், கடவுளுக்கும் இடையில் மதம் என்பது கிடையாது என்றும் குறிப்பிட்டார்
விஜய் சேதுபதியின் இந்த குறித்து யாரும் பேசாம இருந்த நிலையில் நடிகை காயத்ரி பேசி வம்பிழுத்தருக்கிறார் 'இன்னொரு மனிதரை நம்புவதற்கு வாழ்த்துகள் நண்பா. எந்த நம்பிக்கையையும் அழிக்க முடியாது. எல்லா மதத்திலும் கோடிக்கணக்கிலான நம்பிக்கையாளர்கள் உள்ளனர். நாங்களெல்லாம் ஊமை என்று நீங்கள் நினைத்தால் மன்னித்து விடுங்கள்.எளிதில் பொய் சொல்லக்கூடிய வெறுக்கக் கூடிய மற்றொரு மனிதனை நீங்கள் நம்புவதற்குச் சாரி. வாழ்க்கை கடவுளால் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருமனிதன் மூலம் தான் இன்னொரு மனிதனுக்கு வெற்றி கிடைக்கும் என்பது பொய். மனிதனின் வெற்றி கடவுள் கையில் தான் உள்ளது. எனவே நான் மனிதனை விடக் கடவுளைத் தான் நம்புவேன் என்று கூறினார்.
விஜய் சேதுபதிக்குக் கண்டனம் தெரிவித்தே காயத்ரி இப்படியொரு பதில் அளித்ததாகக் கூறப்பட்ட நிலையில் அதுபற்றி விஜய் சேதுபதி எதுவும் பதில் சொல்லவில்லை.
இதில் ஏமாற்றம் அடைந்த காயத்ரி மீண்டும் ஒரு கருத்தை அவரே வெளியிட்டார் அதில் “விஜய் சேதுபதி பேச்சை நான் கண்டிக்கவில்லை. அவருடைய கருத்தில் ஒத்துப் போக வில்லை.இப்படிச் சொல்வது என்னுடைய சுதந்திரம். மதச்சார்பின்மை என்ற பெயரில் உள்ள பகுத்தறிவாளர்கள் விஜய் சேதுபதி பேச்சை விரும்பு வார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் விஜய் சேதுபதி யை ஏன் அரசியல் களத்துக்கு இழுக்கப் பார்க்கிறீர்கள் என்று சிலர் காயத்ரியைக் கேள்வியால் துளைத்திருக்கின்றனர்.