விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஆடியோ ரிலீஸின்போது இரு வரும் கட்டிப்பிடித்து வரவேற்றனர். இதில் கல்லூரி டீன் ஆக நடிக்கிறார் விஜய்.
வில்லன் வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி ரவுடித்தனங்களை கட்டவிழ்த்து. விட்டிருக்கிறார். ஏற்கனவே விஜய்யின் கதாபாத்திரப் பெயர் ஜேம்ஸ் துரைராஜ் என்று தெரியவந்தது. தற்போது விஜய்சேதுபதி கதாபாத்திர பெயர் தெரிய வந்துள்ளது. பவானி தாதா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
விஜய், விஜய்சேதுபதி இருவரும் படத்தில் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகளில் குளுகுளு அரங்கையே அனல் பறக்க வைக்கும் என்கின்றனர் பட தரப்பினர்.