விஜய்யுடன் தலைவா, தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் சோலோ ஹீரோயினாக ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்துப் பரபரப்பை ஏற்படுத்தியவர் அமலாபால்.
தலைவா படத்தில் நடிக்கும்போது அப்பட இயக்குநர் ஏஎல்.விஜய்யுடன் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் மனமொத்திருந்த தம்பதிக்குள் திடீர் மனக்கசப்பு தோன்றியது. திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்று விஜய் குடும்பத்தினர் கட்டுப் பாடு விதித்தாக தெரிகிறது. இதனால் பிரிவு அதிகரித்தது. இதையடுத்து 2016ம் ஆண்டு ஏஎல் விஜய்யிடமிருந்து சட்டப்படி விவகாரத்து பெற்றுப் பிரிந்தார் அமலா பால். பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்தி படமொன்றிலும் அமலாபால் நடிக்க வாய்ப்பு வந்தது.
இந்தியில் நடிக்கச் சென்ற அமலா பாலுக்கும் இந்தி பட பாடகர் பவிந்தர் சிங்குடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக டேட்டிங் செய்து வந்தனர். பவிந்தர் சிங்குடன் அமலா பால் பர்தா அணிந்து முஸ்லிம் பெண் போல் ஷாப்பிங் சென்ற புகைப் படங்கள் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதையடுத்து அவர்களின் காதல் அம்பலத்துக்கு வந்தது. இந்நிலையில் அமலாபால், பவிந்தர் சிங் திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ரகசியமாக நடந்த இந்த திருமண விழாவில் நெருக்க மானவர்கள் மட்டும் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. திருமண படத்தைத் தனது இணைய தள பக்கத்தில் பவிந்தர் சிங் வெளியிட்டு சிறிது நேரத்தில் நீக்கி விட்டார். தினமும் இன்ஸ்டா கிராமில் புகைப்படம் பகிராமல் தூங்கச் செல்லாத அமலா பால் தனது மறுமண படத்தைப் பகிர வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.