கொரோனா வைரஸ் பாதிப்பில்லாவிட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடிகர், நடிகைகள். தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தன்னைத்தானே தனிமைப்படுத்தி வீட்டில் இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
வரும் 30ம் தேதி வரை தனிமை பாதுகாப்பு முறையை கடைப்பிடிக்கப்போவதாக ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையையும் தனது கையில் அமிதாப் சீல் குத்தியிருக்கிறார்.
கபாலி, தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. இவருக்குத் திருமணம் ஆன விஷயம் பலருக்குத் தெரியாது. லண்டனைச் சேர்ந்த இசை அமைப்பாளர் பெனிடிக் டெய்லரை மணந்த இவர் லண்டனிலேயே செட்டிலாகி வசிக்கிறார். படங்களில் நடிக்கும்போது மட்டும் இந்தியா வந்து செல்கிறார். சமீபத்தில் இந்தியா வந்த ராதிகா ஆப்தே கொரோனா பாதிப்பு குறித்து எச்சரிக்கை செய்தார்.
லண்டனில் இருந்து இந்தியா வரும்போது விமானத்தில் கூட்டம் நிரம்பியிருக்கும். ஆனால் தற்போது விமானத்தில் கூட்டமே இல்லாமல் காலியாக கிடந்தது. ரசிகர்கள் எனது நலன் பற்றி விசாரித்ததுடன் பத்திரமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களுக்கு நன்றி. நான் நலமாக இருக்கிறேன். அவசியமில்லாத பயணங்களை அனைவரும் தவிர்த்துவிடுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு என ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்து பிறகு தெலுங்கில் நடிக்கச் சென்றார். சார்மி. தற்போது படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ளும்படி கேட்டிருக்கிறார். கொரோனா உலகத்தையே கலவரப்படுத்தி வருகிறது இது 2ம் உலகப் போரை விடப் பயங்கரமானது எனப் பிரதமர் கூறி உள்ளார். கொரோனாவை ஒழிப்பதில் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும். அரசு சுகாதாரத் துறை கொடுக்கும் ஆலோசனையை ஏற்றுச் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள்' எனக் கூறியிருக்கிறார் சார்மி.