இயக்குநர் - நடிகர் விசு திடீர் மரணம்..

by Chandru, Mar 22, 2020, 19:44 PM IST

நடிகர், இயக்குநர் விசு திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் திரையுலகில் 80களில் குடும்பம் ஒரு கதம்பம் படம் மூலம் தமிழ் ரசிகர்களைத் தனது அடுக்கு மொழி வசனத்தின் மூலம் அசரவைத்தவர் விசு.

மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம் என மறக்கமுடியாத படங்களைப் படங்களை வழங்கியவர். சம்சாரம் அது மின்சாரம் என்ற படம் வெள்ளிவிழா கண்டத்துடன் விருதுகளும் குவித்தது. விசுவை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு சென்றது.
75 வயதான விசு கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனில்லாமல் இன்று மாலை இறந்தார்.

விசு 1945-ம் ஆண்டு பிறந்தார். இயக்குநர் கே .பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி பின்னர் இயக்குநராகி பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கினார். முன்னதாக மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.
விசுவுக்கு வலது கரமாகத் திகழ்ந்தவர் கிஷ்மு. இவர் விசுவின் சகோதரர். விசு படங்கள் எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார். விசுவுக்கு சுந்தரி என்ற மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.
விசு மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You'r reading இயக்குநர் - நடிகர் விசு திடீர் மரணம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை