சினிமாவில் எல்லாமே ஜிகினா வேலைதான் என்றாலும் ஒரு சில உணர்வுகள் உண்மையின் வெளிப்பாடாகவும் அமைந்திருக்கிறது. கே.பாலசந்தர் படத்தில் நடிக்கும்போதும், சிவாஜியுடன் நடிக்கும்போதும் அவர்களுக்கு ரஜினி காட்டும் மரியாதை சினிமா காட்சியிலேயே காண முடியும்.
அதுபோன்ற மரியாதையை நடிகை அனுஷ்காவிடமும் காணலாம். தெலுங்கு பட உலகின் சீனியர் இயக்குனர் ராகவேந்திராவிற்கு அவர் காட்டும் மரியாதை திரையு லகில் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரியும் இன்னொரு இயக்குனர் மீதும் அனுஷ்கா மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். அந்த இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா.
சமீபத்தில் டி.வி நிகழ்ச்சி ஒன்றில் அனுஷ்கா கலந்து கொண்டார். தன்னுடன் இணைந்து நடித்த பிரபாஸ் போன்ற நடிகர்கள் பற்றிக் கூறும் போது சிரித்துக்கொண்டு ஜாலியாக பதில் சொன்ன அனுஷ்கா.
கோடி ராமகிருஷ்ணாவைப் பற்றிச் சொல்லவந்தபோது. அவருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. வார்த்தைகள் வராமல் தடுமாறினார். திடீரென்று கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.
சில நிமிடங்கள் கண்ணீரைத் துடைத்தபடி நின்றிருந்தார். அவருக்கு அங்கிருந்தவர்கள் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்திய பிறகே இயல்பு நிலைக்கு வந்தார். கோடி ராம கிருஷ்ணாவை நினைத்து அனுஷ்கா அழுததற்குக் காரணம் அவர் தற்போது உயிரோடு இல்லை. அதுமட்டுமல்லாமல் அவரது படங்களில் அனுஷ்கா நடித்திருக்கிறார். படப்பிடிப்பில் அவரை தன் மகள் போல் பார்த்துக்கொள்வார் .கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா நடித்த அருந்ததி படம் மற்றொரு புதிய பரிமாணத்துக்கு கொண்டு சென்றது.