தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் தள்ளிப்போகுமா? கொரோனா பாதிப்பால் சினிமா முடக்கம்..

by Chandru, Mar 24, 2020, 11:35 AM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் வரும் ஜூன் மாதத்துக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து தேர்தலில் போட்டியிட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் அணி அமைத்துள்ளனர்.
டி.சிவா தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி, ராமநாராயணன் முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி என 2 அணிகள் உருவாகின. வரும் ஏப்ரல் முதல் வாரம் சங்க தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் திரையுலகமே முடங்கிக்கிடக்கிறது. படப் பிடிப்பு முதல் திரை அரங்குளில் படம் திரையீடு வரை எல்லா பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.டி.சிவா அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், 'எங்களது சங்க உறுப்பி னர்கள் பலர் 60 வயதைக் கடந்தவர்கள். அவர்களால் தற்போது சங்கத்துக்கு வரமுடியாத நிலை உள்ளது. எனவே கொரோனா அச்சுறுத்தல் நீங்கிய பிறகு தேர்தல் வேலைகளைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
READ MORE ABOUT :

Leave a reply