ரஜினி, அமிதாப் சூப்பர் ஸ்டார்களுக்கு என்ன ஆச்சு... டிவிட்டரில் தவறான தகவல் பரப்புவதாக பரபர..

by Chandru, Mar 24, 2020, 14:20 PM IST

கொரோனா வைரஸ் பற்றி பிரபல நடிகர், நடிகைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். உச்ச நட்சத்திரம் முதல் காமெடி நடிகர்கள் வரை தங்கள் பாணியில் இதுபற்றி பரப்புரை செய்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட டிவிட்டர் மெசேஜில் இந்தியா கொரோனா பாதிப்பில் 3வது கட்டத்திலிருக்கிறது என்று சில விவரங்களை குறிப்பிட்டு மெசேஜ் வெளியிட்டார். அந்த கருத்து டிவிட்டர் பாலிசிக்கு எதிராக இருப்பதாக டிவிட்டர் நிர்வாகமே அதனை நீக்கியது.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் டிவிட்டரில் பகிர்ந்த ஒரு மெசேஜை பின்னர் அவரே நீக்கிவிட்டார். "22 மார்ச் அமாவாசை, இந்த மாதத்தின் இருட்டான நாள். வைரஸ், பாக்டீரியா போன்ற தீய சக்திகள், சக்தி வாய்ந்தவையாக இருக்கும். கைதட்டுவதால் அவற்றின் சக்தி குறையும். நிலா, ரேவதி நட்சத்திரம் வழியாகக் கடக்கும். ஒட்டு மொத்த அதிர்வும் ரத்த ஓட்டத் திற்கு நல்லது," என்று குறிப்பிட் டிருந்தார்.

மார்ச் 22ம் தேதி அமாவாசையே இல்லை. கைதட்டுவதால் வைரஸின் பவர் குறையும் என்று சொல்வதெல்லாம் உண்மையில்லை. 'வாட்ஸ் அப் ஃபார்வேர்டு மெசேஜை அப்படியே எடுத்துப்போட்டது போல் இருக்கிறது என பலரும் அமிதாப் மெசேஜ் பற்றி விமர்சனம் செய்தனர். இதையடுத்து உடனடியாக அந்த டுவீட்டை நீக்கிவிட்டார் அமிதாப்.

பிரபலங்கள் கொரோனா பற்றிய தகவல்களை சொல்லும்போது அதில் இருக்கும் உண்மைத் தன்மை என்ன என்பதைத் தெரிந்து கொண்டு கருத்து சொல்ல வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Leave a reply