வீட்டு மாடியில் சண்டை போடும் அருண் விஜய்..

by Chandru, Mar 26, 2020, 17:54 PM IST

அருண் விஜய்யாரிடம் சண்டை போட்டார் என்று அதிர்ச்சியாகாதீர்கள். கொரோனாவின் தனிமையால் சினிமா சண்டை பயிற்சிகளை அவர் வீட்டு மாடியிலேயே செய்து பழகுகிறார்.

வீட்டின் மாடியில் படிகளை தாண்டி குதித்தும், சிக்ஸ் பேக் உடற்கட்டுக்குமான உடற்பயிற்சி செய்த வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

'ரொம்ப நாளைக்கு பிறகு வீட்டிலேயே பார்க்கர் ஸ்டண்ட் பயிற்சி செய்கிறேன். வீட்டில் இருக்கும் இந்நாளில் ஃபிட்டாக உங்களை பராமரித்துக் கொள்ளுங்கள். 21 நாட்கள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம்' என தெரிவித்திருக்கிறார் அருண் விஜய்.


Leave a reply