சமூக விலகல் அச்சம் தருகிறது.. இயக்குனர் எழுப்பும் சந்தேகம்..

by Chandru, Apr 1, 2020, 14:20 PM IST

கொரோனாவை தடுக்க ஒருவரைவிட்டு ஒருவர் விலகி இருக்க வேண்டும் அதாவது சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து அச்சம் எழுப்பி உள்ளார் இயக்குனர் விஜய் மில்டன்.


விக்ரம் சமந்தா நடித்த பத்து எண்ணறதுக்குள்ள மற்றும் கோலி சோடா', 'கடுகு', 'கோலி சோடா 2' போன்ற படங்களை இயக்கியவர் விஜய் மில்டன். இவர் ஒளிப்பதிவாளரும் ஆவார். விஜய் மில்டன் தனது டிவிட்டரில் பக்கத்தில் மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது: சமூகப் பாதுகாப்புக்காக நாம் தனித்திருப் பதை அதீதமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. தீண்டாமை, குடும்ப பாதுகாப்பு என்ற போர்வையில் நம்முள் இறங்கிவிட்டது.
மனிதர்களை மந்தைகள் போல் கூட்டமாக்கிப் பூச்சி மருந்து தெளிப்பதையும், சொந்த ஊர்களுக்குத் திரும்ப விடாமல் கொட்டடியில் அடைப்பதையும் சரிதான் என்று நினைக்க ஆரம்பித்து விட்டோம். ஏற்கனவே கயிறு கட்டியவன், கட்டாதவன் என வட்டம் போட்டுக் கொண்ட நாம் மேலும் சுருங்கி சுயநலமே பொதுநலம் என்றாகிக் கொண்டிருக்கிறோம்.
சக மனிதர்களை ஏன் நண்பர்களைக் கூட அவநம்பிக்கையோடு தூரத்தில் வைக்க நேரிட்டுவிட்டது. நம் பிள்ளைகளின் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என அச்சமாக இருக்கிறது. சமூக இடைவெளி என்பது மனதுக்குள் மனிதருக்குள் நிரந்தரமாகி விடுமோ என்று அச்சம் வருகிறது.

இவ்வாறு விஜய் மில்டன் கூறி உள்ளார்.


More Cinema News