தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே. பாக்யராஜ் கூறியிருப்பதாவது :கொரோனா வைரஸ் தொற்று பற்றி அரசாங்கம் அரசியல்வாதிகள்.வி ஐ பி க்கள் என எல்லோருமே விழிப்போடும் கைகளைக் கழுவியும் இடைவெளி விட்டும் இருக்க வேண்டும் என்று திரும்பத்திரும்பச் சொல்வதற்கு காரணம் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், நம் உறவினர்கள், நண்பர் கள், குடும்பத்தார் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான்.
டாக்டர்கள், அரசாங்கம் சொல்வதைக் கேட்க வேண்டும். அதேசமயம் நோயை எண்ணிப் பயந்து விடக்கூடாது. பாக்கியாவில் நான் ஒரு கதை எழுதியிருந்தேன். எவ்வளவு புகழ் பணம் வந்தாலும், எவ்வளவு தாழ்வு நிலை வந்தாலும் அது ஒரு நாள் நம்மைக் கடந்து போகும் என்பதுதான் அந்த கதையின் கரு. அப்படித்தான் இந்த கொரோனவும் கடந்து போகும்.
தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எங்களின் எழுத்தாளர் சங்கம் சார்பில் தலா 50 ஆயிரம் நிவாரண நிதி அனுப்பப்படுகிறது. பெப்சியில் உறுப்பினராக எங்கள் சங்கம் உறுப்பின ராக உள்ளதால் எங்கள் உறுப்பினர்களுக்கும் பெப்சி சார்பில் கொரோனாவுக் காக வழங்கப்பட்ட உதவி கிடைத்தது. எங்கள் சங்கம் சார்பிலும் எங்கள் உறுப்பினர்களுக்கு ரூ 1500 உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு கே.பாக்யராஜ்
கூறினார்.