மலையாள நடிகர் மோகன்லால் இந்த வயதிலும் தனது உடற்கட்டை திடகாத்திரமாக வைத்திருக்கிறார். ஆனால் யாரோ ஒருவர் அவரைப்பற்றி வதந்தி பரப்பி விட்டனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அவர் திடீர் மரணம் அடைந்துவிட்டதாக வதந்தியில் தெரிவித்திருந்தனர். அதைக் ரசிகர்களும் திரையுலகினரும் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி விசாரித்தபோது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்திற்காக யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்பது தெரிந்தது.வதந்தி கிளப்பிவிட்டு நபரைக் கேரள போலீசார் தேடி வருகின்றனர்.