காலா திரைப்படத்தின் டீஸர் வெளியாகிய 24 மணி நேரத்தில் 1.2கோடி பேர் பார்த்து சாதனை படைத்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்து பா. ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் காலா. இந்த திரைப்படத்தில், ரஜினிகாந்த் உடன் ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டில், நானா படேகர், சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். இசைப் பணியை ரஞ்சித் படத்திற்கு தொடர்ந்து இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் ஏற்றுள்ளார். இந்நிலையில், படத்தில் டீஸர் நேற்று மார்ச் 2ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
இந்நிலையில் டீஸர் வெளியாகிய 24 மணி நேரத்தில், 1.2 கோடி பேர் பார்த்து சாதனை படைத்துள்ளது. அதேபோல் நேற்று முழுவதும் இந்தியாவில் ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.