கவுதம் மேனன் கையில் நிறைய இரண்டாம் பாக கதைகள் உள்ளன. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், விண்ணைத் தாண்டி வருவாயா.. இந்த படங்களின் நாயகர்களில் கமல், சிம்பு ஆகியவரிடம் ஒன்லைன் சொல்லி ஓகே வாங்கி வைத்திருக்கிறார் கவுதம். ஆனால் ஷுட்டிங் எப்போது என்று தெரியாது.
இந்நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை கதையாகக் குயின் என்ற வெப் தொடர் இயக்கினார் , அதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார். இந்த சீரிஸ் எம்ஜிஆர் மரணத்தோடு நிறைவடைந்தது. இந்த சீரிஸுக்கு வரவேற்பும் இருந்தது.
இதையடுத்து குயின் வெப் சீரிஸின் 2பாகம் உருவாக்க முடிவு செய்திருக்கிறார். இரண்டாம் பாகத்திலும் ரம்யா கிருஷ்ணனே ஜெயலலிதாவாக நடிக்க உள்ளார்.