சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இதன் 2ம் பாகத்தில் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.
இதுகுறித்து லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரஜினி சார் நடித்த சந்திரமுகி 2 ம் பாகத்தில் ரஜினி சார் அனுமதியுடன் நான் நடிக்கிறேன். இப்படத்தை பி.வாசு இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிப்பதற்காகக் கிடைக்கும் அட்வான்ஸ் தொகையிலிருந்து ரூ 3 கோடியை கொரோனா நிதிக்கு அளிக்கிறேன். அதன்படி பிரதமர், முதல்வர் , பெப்ஸி, நடன இயக்குனர் சங்கத்துக்குத் தலா 50 லட்சம் இத்துடன் மாற்றுத் திறனாளி நல உதவியாக 25 லட்சம், எனது பிறந்த இடமான ராயபுரம் மக்களுக்காக 75 லட்சம் வழங்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.