கொரோனா தொற்று பயத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் எல்லோரும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களது பொழுதுபோக்கு டிஜிட்டல் தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் போன்றவையாகவே இருக்கிறது. அதில் வரும் சீரிஸ்கள் பற்றி பிரபல ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான பி .சி. ஸ்ரீராம் கூறும்போது, 'டிஜிட்டல் தளங்கள் சலிப்பு தட்டுவதாக உள்ளது. எல்லா சீரிஸ்களும் ஒன்றுபோவே திகில் கதைகளாக உள்ளன. அடுத்த காட்சி என்ன என்பதை யூகித்துவிடலாம். ஆக்க பூர்வமான பணிகளைக் காண முடியவில்லை. கலை இப்போது ஒரு வர்த்தக பண்டமாக மாறிவிட்டது 'எனத் தெரிவித்திருக்கிறார்.