நடிகர், நடிகைகள் கொரோனா விழிப்புணர்வை வீட்டிலிருந்தே பலர் செய்து வருகின்றனர். இந்தி நடிகை ஒருவர் நர்ஸ் படிப்பு படித்திருந்ததால் கொரோனா தொற்று நேரத்தில் மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். அதேபோல் தமிழ் நடிகை ஒருவர் மக்களுக்கு உதவும் வகையில் கால் சென்டரில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
தமிழில் வெற்றிவேல், கிடாரி, தம்பி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நிகிலா விமல். கேரளாவில் வசிக்கிறார். ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மக்களுக்குக் கொடுப்பதை ஒருங்கிணைக்க கண்ணூரில் கால் சென்டர் அமைந்துள்ளது. அந்த மையத்தில் தன்னார்வலராக சேர்ந்து பணியாற்றி வருகிறார்.