இயக்குனர் மணிரத்னம் கோலிவுட்டின் மந்திர சொற்களில் ஒன்று. ஓ கே கண்மணி, காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களைத் தொடர்ந்து தற்போது தனது கனவு படமான, 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கி வருகிறார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி எனப் பெரிய நட்சத்திரப்பட்டாலாமே நடிக்கின்றனர். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இத்தருணத்தில் மணிரத்னத்துடன் வாட்சப் மூலம் பேச அவரது மனைவி சுகாசினி வாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.
இது பற்றி சுகாசினி கூறும் போது, 'நண்பர்களே கடந்த 40 வருடமாக அவரின் (மணிரத்னம் ) பணியை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இது அவர் உங்களைச் சந்திக்கும் நேரம். ஒரு வீடியோவில் 25 நொடிகளில் அவரிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்வியை பதிவு செய்து அவரது 90946 77777 என்ற வாட்சப் எண்ணில் அனுப்புங்கள். அதைப் பார்த்துவிட்டு மணிரத்னம் பதில் அளிப்பார்' என சுகாசினி தெரிவித்திருக்கிறார்.