குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமாகி கதாநாயகியாக நடித்து தயாரிப்பாளராகி தற்போது சின்ன திரையில் மறக்க முடியாத சீரியல்களை தயாரித்தளித்து வருபவர் குட்டி பத்மினி. நடிகர், டிவி மற்றும் தயாரிப்பாளர்கள் போன்ற சங்கங்களிலும் இவர் நிர்வாகியாகப் பொறுப்புகள் வகித்துள்ளார்.
எப்போதும் நற்பணிகளில் தன்னை இணைத்துக் கொள்ளும் குட்டி பத்மினி கொரோனாவின் ஊரடங்கில் சிக்கிக் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு உதவும் வகையில் சின்னதிரை நடிகர்கள் , சின்னத்திரை இயக்குனர் சங்கம், எழுத்தாளர் சங்கம், பெப்சி, சினிமா பத்திரிகையாளர் சங்கம், தென்னிந்தியத் திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன், மற்றும் பொதுமக்கள் உட்பட ஏறத்தாழ 2000 பேர்களுக்கு அரிசி, பருப்புவகைகள், பண உதவி என வழங்கினார்.இக்கட்டான நேரத்தில் உதவிய குட்டி பத்மினிக்கு அனைவரும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.