கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருக்கும் ஸ்ருதி ஹாசன் உடற்பயிற்சி செய்தும், பாட்டுப் பாடியும் புத்தகங்கள் படித்தும் பொழுதைக் கழித்து வருகிறார். நேற்று இடுப்பில் வளையத்தை மாட்டிக் கொண்டு அதைச் சுழல விட்டு யார் வேண்டுமானாலும் இப்பயிற்சி செய்ய முடியும் என்று ஊக்கம் அளித்தார். இன்று தன் தந்தை கமல் நடித்த நாயகன் படத்தில் இடம்பெற்ற தென்பாண்டி சீமையிலே என்ற பாடலைப்பாடி வீடியோ வெளியிட்டார். தானே பியானாவில் இசை அமைத்தபடி அப்பாடலை உணர்சிததும்பப் பாடியிருக்கிறார். அத்துடன் தனது மேற்கத்தியப் பாணி ஸ்டைலையும் இடையிடையே கையாண்டுள்ளார்.