22 வருடத்துக்கு முன் அஜீத்தும், ஷாலினியும் அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அப்போது ஷாலினி அஜீத்திடம் ஒரு நேரத்தில் ஒரு படம்தான் ஒப்புக்கொள்ள வேண்டும் மாதத்தில் 15 நாள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று கேட்டார். அதை அஜீத்தும் ஒப்புக்கொண்டார். கடந்த 22 வருடமாக தான் செய்து தந்த சத்தியத்தைத் தவறாமல் கடைப்பிடித்து வருகிறார். இதனை அஜித்தே ஒரு பேட்டியின் போது தெரிவித்தார்.