நடிகை கங்கனா ரணாவத் தமிழில் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் தலைவி படத்தில் நடித்து வருகிறார். இவரது சகோதரி ரங்கோலி. கங்கனாவை பற்றியோ, மோடி, அமித்ஷா பற்றியோ யாராவது விமர்சித்தால் உடனே பொங்கி எழுவார். சமீபத்தில் குறிப்பிட்ட மதத்தினர் பற்றி கடுமையாக விமர்சித்து டிவிட்டரில் மெசேஜ் வெளியிட்டார் ரங்கோலி. இது பெரும் சர்ச்சையானது. அவரது டிவிட்டர் கணக்கை ரத்து செய்யவேண்டும் என்று பலரும் புகார் செய்தனர். இதையடுத்து அவரது டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இதையறிந்து கங்கனா ரனாவத் கோபம் அடைந்தார். அவர் கூறும்போது, 'இந்தியாவில் டிவிட்டர் இணையதளத்தைத் தடை செய்ய வேண்டும் தனிப் பட்ட முறையில் இந்தியாவுக்கென்று புதிய தளத்தை இந்திய அரசு உருவாக்க வேண்டும் ' என்று கூறியுள்ளார்.