விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கியவர் சீனுராமசாமி. இப்படத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. அடுத்து தர்ம துரை,நீர்ப்பறவை போன்ற படங்கள் இயக்கி உள்ளார். கொரொனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் இவர் தானே சமைத்துச் சாப்பிடுகிறார். அதுவும் மிக்ஸி எதுவும் பயன்படுத்துவதில்லை. மசால் அரைப்பதற்கு அம்மிக்கல்லைத்தான் பயன்படுத்துகிறார்.
அம்மியில் மிளகு, சீரகம் மற்ற மசாலாக்களை வைத்து நன்கு அரைத்து அதைக் கொதிக்கும் புளி கரைசலில் போட்டுக் கொதிக்க வைத்து அதன் நறுமணத்தை அருகிலிருந்து ரசிக்கிறார். அதற்கான வீடியோவையும் சீனுராமசாமி பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரசவாதம் என தலைப்பும் வைத்திருக்கிறார். அவரது வீடியோ குடும்பத் தலைவிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.