கடந்த ஆண்டு வெளியான படம் ஹீரோ. பி. எஸ். மித்ரன் இயக்கினார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்தார். படம் வெளியாவதற்கு உதவி இயக்குனர் போஸ்கோ பிரபு என்பவர் ஹீரோ படக் கதை என்னுடையது என்று எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரிக்க இயக்குனர் மித்ரனை அழைத்தபோது வர மறுத்து விட்டார்.
இந்நிலையில் ஐகோர்ட்டில் படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இதற்கிடையில் ஹீரோ படம் ரிலீஸ் ஆனது. ஆனால் வெற்றிகரமாக ஓடாததால் டிவி, அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது. தற்போது ஐகோர்ட் இடைக்காலத் தடையால் சாட்டிலைட், டிவி, ஓ டி டி தளங்களில் படத்தை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஹீரோ படம் அமேசான் பிரை மிலிருந்து நீக்கப்பட்டது.