நய்யப்புடை, கதம் கதம் ஸ்ட்டிரா பெரி போன்ற பல படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் தாஜ்நூர். இவர் கொரோனவை விரட்டும் பாடல் உருவாக்கியிருக்கிறார். இது பற்றி தாஜ்நூர் கூறியது.கொரோனா பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும் எண்ணத்தில் பாடல் ஒன்றைத் தயார் செய்யலாம் என முடிவு செய்தேன். முதல் வார்த்தை அனைவருக்கும் பழகிய ஒரு வார்த்தையாக இருக்க வேண்டும் எனவும்,கொரோனாவினால் சோர்ந்துபோய் இருப்பவர்களை உற்சாக மூட்டும் வகையில் இருக்க வேண்டும் எனவும் திட்டமிட்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 'பாட்ஷா' படத்தில் இடம் பெற்ற "உள்ளே போ"என்ற பன்ச் டயலாக்கை முதல் வார்த்தையாக வைத்து உருவாக்கலாம் எனும் முடிவுக்கு வந்தேன்.
அதன்படி முதல் மூன்று வரிகளை நானே எழுதி விட்டு கவிஞர் பா. இனியவனை தொடர்பு கொண்டு இந்த பாடலை முழுமையாக எழுதித்தரக் கேட்டு கொண்டேன். அவரும் அன்றே பாடலை எழுதிக் கொடுத்து விட்டார். பாடகர்கள் வேல் முருகன், தீபக் மற்றும் ஷிவானி ஆகியோர் பாடலைப் பாடினர். பெண் ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். கமலக்கண்ணன் எடிட்டிங் செய்திருக்கிறார்.
இவ்வாறு தாஜ்நூர் கூறினார்.