ரஜினியின் பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் அடுத்து விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் அவர் தனது கவனத்தை பைக் ரேஸ் ஓட்டுவதில் திருப்பி இருக்கிறார்.'கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் முதன்முறையாக நடந்த பார்முலா ஒன் டிராக்கில் ரேஸ் பைக் ஓட்டினேன். தற்போது பைக் ரேஸில் பங்கேற்பதற்கான பயிற்சி எடுக்கிறேன். ஊரடங்கு முடிந்தவுடன் இதில் முழுமையாகக் கவனம் செலுத்துவேன்' என்றார் மாளவிகா மோகனன்.
பைக் ரேஸ் ஓட்டும் வீடியோவையும் மாளவிகா வெளியிட்டிருக்கிறார்.