டிவியிலிருந்து சிவகார்த்திகேயன், ம கா பா போன்றவர்கள் திரைக்கு வந்ததுபோல் மற்றொரு தொகுப்பாளரான ரக்ஷன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்திருக்கிறார். இவர் கொரோனா ஊரடங்கில் வீட்டில் கமகம சிக்கன் பிரியாணி செய்து பரிமாறியிருக்கிறார். ருசியான கமகம பிரியாணி செய்வது எப்படி என்று செய்முறை விளக்கத்தையும் அதற்குத் தேவையான பொருட்களையும் பட்டியலிட்டிருக்கிறார். மேலும், நண்பர்களே தோழிகளே பிரியாணி செய்வது ரொம்ப ஈசி செய்து பாருங்கள்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.