ஒ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்திருப்பவர் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் 'வரனே அவசியமுண்டு' என்ற படத்தைத் தயாரித்து நடித்திருந்தார். இதில் போராளி பிரபாகரன் பெயரைப் பயன்படுத்தி ஜோக் இடம் பெற்றுள்ளதாகச் சிலர் நெட்டில் விமர்சனம் வைத்தனர். அதற்கு துல்கர் சல்மான் வருத்தம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், வரனே அவசியமுண்டு படத்தில் இடம்பெற்றுள்ள பிரபாகரன் ஜோக்கை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். பழைய மலையாள படம் பட்டன பிரவேசம் படத்தைச் சார்ந்து எடுக்கப்பட்ட ஜோக்தான் இது. யாரையும் காயப்படுத்தும் நோக்கில் இது எடுக்கப்பட்டதில்லை. ஆனால் படம் பார்க்காமலே பலர் தவறாக வதந்தி பரப்புகின்றனர். இது எங்களைக் காயப்படுத்துவது போல் உள்ளது. யாருக்காவது மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காகத் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார். துல்கரின் டிவிட் மெசேஜை பார்த்த நடிகர் பிரசன்னா ,”மலையாள படங்களை ஒரு தமிழனாக நான் நிறையப் பார்த்திருக்கிறேன்.என்னால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சிலரின் தவறான புரிதலால் உங்கள் மீது காட்டப்பட்ட வெறுப்பு பேச்சுகளுக்காக மன்னிப்பு கேட்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.