சசிகுமார்க்கு ஜோடியாகப் பிரம்மன் மற்றும் மாயவன் படங்களில் நடித்திருப்பவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். கிளாமர் வேடங்களை ஏற்காததே அவரது தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது கட்டுப்பாடுகளை உடைத்தார்.அவர் கூறும்போது, ' கிளாமர் வேடங்களில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.. நீச்சல் உடையும் அணிந்து நடிக்கத் தயார். மேலும் ஒ டி டி தள வெப் சீரிசிலும் நடிக்கக் கேட்டு வாய்ப்பு வருவதால் அதிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன் ' என்றார் லாவண்யா திரிபாதி.