நடிகர் ஆர்யா கடந்த சில மாதங்களாகவே உடலில் வெயிட் போட்டு பாக்ஸர் போல் கட்டுமஸ்தாக்கி வைத்திருக்கிறார். அவரை வெயிட் போடச்சொன்னது கபாலி இயக்குனர் பா. ரஞ்சித். வடசென்னையை மையமாக வைத்துக் குத்துச் சண்டை வீரர்கள் கதையாக சல்பேட்டா என்ற படத்தை உருவாக்க உள்ளார் ரஞ்சித். அதில் நடிக்கத்தான் இப்படி ஆகியிருக்கிறார் ஆர்யா. படப்பிடிப்பு தொடங்கவிருந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கு குறுக்கிட்டது. இதனால் போட்ட வெயிட்டை மெயின்டெயின் செய்யத் தினமும் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் ஆர்யாவின் மனைவி சாயிஷா வித விதமாக கேக், அது இது என்று புதுவெரைட்டிகளை செய்து கொடுத்து ஆர்யாவை மேலும் வெயிட் போட வைக்கிறார். உடலில் ஏடா கூடமாகச் சதை போட்டுக் கட்டுக்குலைந்து விடக் கூடாது என்பதால்
தற்போது தரையில் கவிழ்ந்து படுத்துச் செய்யும் புதுவித தண்டால் வீடியோவை ஆர்யா வெளியிட்டிருக்கிறார். அதைக்கண்ட நடிகர் மகேந்திரன், ' ஜிம்பாய் போல் உடலைப் பராமரிப்பது அருமை. தோற்றமே ரொம்ப கிரேட்' என தெரிவித்திருக்கிறார். அதற்கு, 'நன்றி பிரதர்' எனப் பதில் அளித்திருக்கிறார் ஆர்யா.