சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் மணந்தார். ரஜினி மகளை தனுஷ் மணக்கப்போகிறார் என்ற தகவல் வெளியானபோது பலர் நம்ப மறுத்தனர். ஆனால் அது நிஜமானது.ஐஸ்வர்யாவைக் காதலித்து மணந்தது எப்படி என்ற சுவாரஸ்யமான குட்டிக்கதையை சொன்னார் தனுஷ். இந்தி பட புரமோஷனுக்காக காமெடி நைட்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனை நடத்திய கபில் கேட்ட கேள்விகளுக்கு தனுஷ் பதில் அளித்தார். அப்போது,ரஜினி மகள் ஐஸ்வர்யாவை மணந்தது எப்படி? என்று கேட்டார்.
திரையுலகுக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் நான் நடித்த காதல் கொண்டேன் படத்தை ஒருநாள் காலையில் பார்க்க வந்திருந்தார் ஐஸ்வர்யா. படத்தைப் பார்த்து எனது நடிப்பைப் பாராட்டியவர் பேச்சின் முடிவில் தொடர்ந்து என்னுடன் தொடர்பிலிருங்கள் என்றார். அதன்பிறகு இருவரும் தொடர்ந்து பேசி வந்தோம். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இரண்டு குடும்பத்தினருக்கும் இது பற்றி தெரியவந்தபோது அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்றார்.