சூர்யா படத்துக்குச் சம்பளத்தைக் குறைத்துக்கொண்ட பிரபல இயக்குனர்..

director Hari reducing 25% of his salary for Suriya film

by Chandru, May 8, 2020, 18:38 PM IST

சூர்யா நடித்த, சிங்கம் படத்தை இயக்கிய ஹரி அப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களையும் இயக்கினார். அடுத்து சூர்யா நடிக்கும் அருவா புதிய படத்தை இயக்குகிறார், இப்படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.இப்படத்திற்காக கொரோனா ஊரடங்கால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாகத் தான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஹரி.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த கொரோனா பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது. நம்முடைய தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைக்குத் திரும்பும். இந்த சூழலை மனதில் கொண்டு நான் அடுத்தாக இயக்கப்போகும் அருவா திரைப்படத்திற்கு என்னுடைய சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன் என ஹரி கூறியுள்ளார்.
அருவா படம் சூர்யாவின் 39வது படமாக உருவாக உள்ளது, முதன்முறையாக டி.இமான் இப்படம் மூலம் இசை அமைக்கவுள்ளார். ராசி கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார்.

You'r reading சூர்யா படத்துக்குச் சம்பளத்தைக் குறைத்துக்கொண்ட பிரபல இயக்குனர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை