மொழி, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஆடு ஜீவிதம் என்ற படத்தின் படப்பிடிப்புக்காக இவர் படக் குழுவினருடன் கடந்த மாதம் ஜோர்டான் நாட்டிற்குச் சென்றார். ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அங்கு கொரோனா பதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் படக் குழுவினர் ஜோர்டானில் சிக்கிக் கொண்டனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகச் சரியான தங்கும் இடம், உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர், அவ்வப்போது பிருத்விராஜ் வாட்ஸ் ஆப்பில் தனது மனைவி குழந்தை உடன் பேசுகிறார்.
பிருத்வியின் தாயார் மல்லிகா சுகுமாரன் திருவனந்தபுரத்தில் தனியாக வாழ்கிறார். அவர், பிருத்விராஜ் கடத்தப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:என் மகனுடன் நான் தொடர்புகொள்ள முடியவில்லை. ஒரு டிவி செய்தி சேனலில் வநத செய்தியைப் பார்த்துவிட்டு என் மகன் ஜோர்டானில் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதனால் மிகுந்த பயத்துக்குள்ளாகி இருக்கிறேன். இதுபற்றி மோகன்லாலிடம் பேசினேன், அதேபோல் சுரேஷ் கோபியிடமும் பேசினேன், அவர்கள் எனக்கு ஆறுதல் கூறியதுடன் ஜோர்டன் நாட்டிற்கு தொடர்பு கொண்டு பிருத்விராஜ் பற்றி விசாரித்து தகவல் தெரிவித்தனர். பிருத்விராஜையும் பட குழுவினரையும் ஜோர்டானிலிருந்து அழைத்து வர அரசு முயற்சி மேற்கொண்டிருக்கிறது.
இவ்வாறு மல்லிகா சுகுமாரன் கூறி உள்ளார்.