கவர்ச்சி நடிகை சோனா. சிவப்பதிகாரம், குசேலன் போன்ற பல படங்களில் கவர்ச்சி மற்றும் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் தனது வாழ்க்கை ரகசியங்களை வெளியிடப்போவதாகக் கூறியிருக்கிறார்.அவர் கூறும்போது,என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் புத்தகமாக எழுதியிருக்கிறேன். அதில் பல்வேறு ரகசியங்களைக் கூறியிருக்கிறேன். அதை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறேன். மேலும் என் வாழ்க் கையில் 2 பேரைக் காதலித்தேன் ஒருவரை 7 வருடமும். இன்னொருவரை 6 வருடமும் காதலித்தேன். அவரும் என்னைக் காதலித்தார். கடைசியில் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டார்கள். இரண்டு காதலும் தோல்வியில் முடிந்தது. அதனால் நான் திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறேன். ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க எண்ணியிருக்கிறேன்” என்றார் சோனா.
சோனா சில இளம் நடிகர், இயக்குநர்களுடன் நெருக்கமாகப் பழகினார். அவர்களின் பெயர்களும் அவர் எழுதியுள்ள புத்தகத்தில் இடம் பெறும். அதில் யார், யார் தலை உருளப்போகிறது என்பது புத்தகம் வெளியாகும்போது தெரியவரும் என்று கோலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது.