தல அஜீத்குமார் நடிக்கும் வலிமை படத்தை தயாரிக்கிறார் போனிகபூர். கொரோனா லாக்டவுனில் மும்பையில் மகளுடன் வீட்டில் இருக்கிறார். இவர் மும்பை கார்ப்ரேஷன் அதிகாரிகளுக்கு போன் செய்து , வீட்டுப் பணியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. அவரை பரிசோதனை செய்யுங்கள் என்று தகவல் கொடுத்தார். இதையடுத்து உடனடியாக வந்த அதிகாரிகள் குறிப்பிட்ட நபரை அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரிந்தது. உடனடியாக அவர் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இது பற்றி போனிகபூர் கூறும்போது. கொரோனா தொற்றுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு பிறகு நானும் மகளும் வீட்டிலேயே தனிமையை கடைப்பிடித்துத் தங்கியிருக்கிறோம். எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை நாங்கள் நன்றாக இருக்கிறோம். நபர் ஒருவரின் உடல் நிலை குறித்து தகவல் தெரிவித்தவுடன் வந்து அவருக்குப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி எனத் தெரிவித்திருக்கிறார்.