லிங்குசாமி தயாரிக்கும் நான்தான் சிவா ரேணிகுண்டா இயக்குநர் டைரக்‌ஷன்..

'ரேணிகுண்டா' மூலம் இயக்குநராக அறிமுக மானவர் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இதையடுத்து '18 வயசு' மற்றும் விஜய்சேதுபதி நடித்த 'கருப்பன்' போன்ற படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும் 'நான்தான் சிவா' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

படம் பற்றி இயக்குநர் கூறியதாவது :
ஒரு இளைஞன், அவனது வாழ்க்கையில் இருவரைச் சந்திக்கின்றான். அந்த இருவரும் அவனின் வாழ்வை வெவ்வேறு வகையில் சிதறடிக்கிறார்கள். அதிலிருந்து அந்த இளைஞன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே இப்படத்தின் ஒரு வரி கதை. இதை காதல் மற்றும் சண்டைக் காட்சிகள் மூலம் கூறியிருக்கிறோம். இதன் படப்பிடிப்பு கும்பகோணம், திருச்சி பகுதிகளில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதன் பாடல் சோனி ஆன்லைனில் வெளியாகியுள்ளது.
கதாநாயகனாகப் புதுமுகம் வினோத் நடிக்க, கதாநாயகியாக 'உதயம் NH4' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அர்ஷிதா ஷெட்டி நடிக்கிறார். பிரசாந்த் நாராயண், அழகம் பெருமாள், சுஜாதா, விசாலினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். தயாரிப்பு - என்.சுபாஷ் சந்திரபோஸ்
இவ்வாறு இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம் கூறினார்.
இப்படத்தின் ஒளிப்பதிவு - பி.ராஜசேகர். சண்டைப் பயிற்சி - ராஜசேகர். நடனம் - தினேஷ். மக்கள் தொடர்பு ஜான்சன் . பாடல்கள் - யுகபாரதி. இசை - டி.இமான். கலை - சீனு . தயாரிப்பு மேலாளர் - ஜி.ஆர்.நிர்மல். படத்தொகுப்பு - ஆண்டனி. இணைத் தயாரிப்பு - ஜி.ஆர்.வெங்கடேஷ்
பையா, அஞ்சான், ரஜினிமுருகன், மஞ்சப்பை, வழக்கு எண் 18/9, தீபாவளி, கும்கி, உத்தமவில்லன் போன்ற பல வெற்றி படைப்புகளைத் தந்த என்.லிங்குசாமி வழங்கும் திருப்பதி பிரதர்ஸ் “நான்தான் சிவா” படத்தைத் தயாரிக்கிறார்கள்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds