கமலை பட்டாம்பூச்சியில் ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் திடீர் மரணம்..

by Chandru, May 22, 2020, 13:27 PM IST

நடிகர் கமல்ஹாசன், களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். ஆனால் ஹீரோவாக நடிப்பதற்கு முன் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். அவரை 1975ம் ஆண்டு வெளிவந்த பட்டாம்பூச்சி படம் மூலம் ஹீரோவாக்கியவர் தயாரிப்பாளர் கே.ரங்கநாதன். இவர் நேற்று திடீரென்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 79. பட்டாம்பூச்சி படத்தை ஏ.எஸ். பிரகாசம் இயக்கி இருந்தார். கடந்த 2018 ம் ஆண்டு ரங்கநாதன் மரகத காடு என்ற படத்தைத் தயாரித்திருந்தார். இது தவிர 5 படங்களை இயக்கியும் உள்ளார்.


More Cinema News