விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா சுபாஷ் நடிக்கும் படம் இடம் பொருள் ஏவல். சீனுராமசாமி இயக்குகிறார். சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்கிறார். இப்படம் கொரோனா தடை முடிந்ததும் விஜய் சேதுபதியின் முதல் படமாக வெளியாக உள்ளதாகத் தகவல் பரவியது.
இதையறிந்து அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் இப்படம் பற்றிய விளக்கம் அளித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய "இடம் பொருள் ஏவல்" திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது என்று சிலர் டிவிட்டரில் செய்தி பரப்பி வருவதாகத் தெரிகிறது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இடம் பொருள் ஏவல் ரிலீஸ் தேதி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்து கொள்கிறோம். கொரோனா தொற்று ஊரடங்கு முடிந்த பின்பு, எங்கள் வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்து பேசி , எங்கள் திரைப்படத்திற்கு ஒரு நல்ல ரிலீஸ் தேதியை அறிவிப்போம். அதுவரை தவறான செய்திகளைப் பகிர வேண்டாம் என்று எங்கள் நிறுவனம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம் .
இவ்வாறு சுபாஷ் சந்திரபோஸ் கூறி உள்ளார் .