சந்திரமுகியாக மாறுகிறார் சிம்ரன்?

Simran To Reprise Jyothika In Chandramukhi-2?

by Chandru, May 24, 2020, 11:20 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் 2ம்பாகம் உருவாகிறது, முதல் பாகத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் வேடத்தை 2ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் ஏற்று நடிக்கிறார். அதேபோல் முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவுக்கு பதில் 2ம் பாகத்தில் சிம்ரன் நடிக்க உள்ளார்.சமீபத்தில் ஜோதிகாவிடம் சந்திரமுகி 2ம் பாகத்தில் சந்திரமுகியாக நடிக்கிறீர்களா என்ற போது, நான் நடிக்கவில்லை. அந்த படம் பற்றி யாரும் என்னிடம் இதுவரை பேசவில்லை என்றார்.



சந்திரமுகி கதாபாத்திரம் நடனத்துக்கு முக்கியத்துவம் உள்ள வேடம். சிம்ரன் நடனம் ஆடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இப்பாத்திரத்துக்கு சிம்ரனும் பொருத்தமாக இருப்பார் என்று பேசப்படுகிறது. அதேபோல் லாரன்ஸும் நடனத்தில் பலே கில்லாடி. இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடும் நடனம் இன்னொரு விருந்தாக ரசிகர்களுக்கு அமையும் என்பதில் சந்தேகமில்லை. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார்.

You'r reading சந்திரமுகியாக மாறுகிறார் சிம்ரன்? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை