ஹாலிவுட் நடிகர்கள் பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். பலர் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்த போதும் சிலர் சிகிச்சை பலனில்லாமல் இறந்தனர். தற்போது பாலிவுட் ஸ்டார்களை குறிவைத்துப் பரவத் தொடங்கியிருக்கிறது கொரோனா வைரஸ்.
தல அஜீத் நடிக்கும் வலிமை படத் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் வீட்டில் வேலை பார்த்த பணியாளர்கள் சிலருக்குச் சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அதேபோல் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்குக் கடந்த மாதம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவரும் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார்.
இந்நிலையில் பாலிவுட் குணசித்ர நடிகர் கிரண் குமாருக்கு நேற்று திடீர் ஜுரம் ஏற்பட்டது. அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்தபோது பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் அதிகம் இருக்கும் நிலையில் தற்போது பாலிவுட் ஸ்டார்கள் பாதித்து வருவது அதிர்ச்சி அளித்துள்ளது.