நடிகை வேதிகா, லாரன்ஸுடன் முனி, சித்தார்த்துடன் காவிய தலைவன், இயக்குனர் பாலாவின் பரதேசி போன்ற தமிழ் மற்றும் பல்வேறு தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய பாடி படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.
தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் வேதிகாவுக்கு இருந்தாலும் அவருக்குப் பட வாய்ப்புகள் குறைவாகவே வருகிறது. தற்போது கோலிவுட் இயக்குனர்கள், நடிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் லாக் டவுன் காலத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்.
தளபதி விஜய் நடித்து திரைக்கு வரத் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் விஜய் பாடியிருக்கும் லெட் மி சிங் ஏ குட்டி ஸ்டோரி.. பாடலுக்கு நடனம் ஆடி டிக் டாக் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். வேதிகாவின் இந்த முயற்சி கோலிவுட்டில் அவருக்கு புதிய பட வாய்ப்புகளைப் பெற்றுத் தருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் வினோதன், ஜங்கிள் என இரண்டு படங்களில் அவர் நடித்தும் வருகிறார்.