நடிகர் சந்தனம் 3 வேடங்களில் நடிக்கும் படம் 'டிக்கிலோனா', அதிக பொருட் செலவில் இப்படம் தயாராகிறது. அனங்கஹா, ஷிரின் கான்ச்வாலா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடிக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ர்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஷர்வானி உடையில் பந்தாவாக இருக்கும் சந்தானத்தின் இரண்டு கைகளுக்கு இடையில் மற்ற இரண்டு சந்தான கதாபாத்திரங்களும் சிக்கிக்கொண்டு கதறுவதுபோல் இந்த காட்சி இடம் பெற்றுள்ளது, கண்டிப்பாகப் படத்தில் காமெடிக்கும் ஆக்ஷனுக்கும் பஞ்சம் இருக்காது என்பதை ப்ர்ஸ்ட் லுக் உணர்த்துகிறது. சந்தானமே இந்த பர்ஸ்ட் லுக்கை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.