சமந்தாவிடம் பூஜா மன்னிப்பு கேட்க வேண்டும்.. ரசிகர்கள் திடீர் போர்க்கொடி..

அல வைகுந்த புரம் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூன்க்கு ஜோடியாக நடித்திருப்பவர் பூஜா ஹெக்டே. இப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து பூஜாவுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.சமீபத்தில் பூஜாவின் இன்ஸ்டாகிராம் கணக்கைச் சிலர் ஹேக் செய்து அதில் சமந்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு நீங்கள் ஒன்றும் அவ்வளவு அழகில்லைஎன்று பதிவிட்டனர். தனது இன்ஸ்டா கணக்கு ஹேக் செய்யப்பட்டதை அறிந்த பூஜா ஹெக்டே இது குறித்து தனது டெக்னிக்கல் டீமிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில் ஊடுருவல் காரர்கள் வெளியிட்ட சமந்தா பற்றிய பதிவு சமந்தா ரசிகர்களை கோபத்துக்குள்ளாக்கியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பூஜாவை திட்டி கமென்ட் பதிவிட்டனர். இதில் கோபம் அடைந்த பூஜா ரசிகர்கள் சமந்தாவுக்கு எதிராக கமென்ட் பகிர்ந்தனர்.இந்நிலையில் பூஜாவின் இன்ஸ்டாகிராம் கணக்கை அவரது டெக்னிக்கல் குழுவினர் ஹேக்கர்களிடமிருந்து மீட்டனர். உடனடியாக சமந்தா பற்றிய பதிவை பூஜா நீக்கினார்.

ஆனாலும் அதை ஏற்க மறுத்த சமந்தா ரசிகர்கள், பூஜா ஹெக்டே சமந்தாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஹேஷ்டேக் பகிர்ந்து அதை டிரெண்டாக்கினர். இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களைச் சமாதானப்படுத்தும் விதமாகத் தனது டிரேட் மார்க் சிரிப்புடன் இரட்டை விரலில் விக்டரி சிம்பல் காட்டிய புகைப்படம் பகிர்ந்திருக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds