நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு. இந்தியிலும் நடிக்கிறார். அசைவ உணவை விரும்பி வெளுத்துக்கட்டும் இவர் திடீரென்று சைவ உணவுக்கு மாறியது பற்றியும். பீட்டா அமைப்புடன் இணைந்து பணியாற்ற உள்ளது பற்றியும் கூறினார்.
அவர் கூறியிருப்பதாவது:உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ம் தேதி வருகிறது. அன்றைய தினம் இதுகுறித்து எனது தரப்பிலிருந்து சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பணிகளைச் செய்யக் காத்திருக்கிறேன். இதற்காக பீட்டா அமைப்புடன் இணைந்து பணியாற்ற உள்ளேன்.
வழக்கமாக நான் அசைவ உணவுதான் விரும்பி சாப்பிடுவேன். அதுவும் முட்டை கண்டிப்பாக இருக்க வேண்டும். சைவ உணவைக் கண்டு கொள்ளவே மாட்டேன். திடீரென்று ஒரு நாள் சைவ உணவுக்கு மாறிவிட்டேன். அதன்பிறகு அசைவ உணவைச் சாப்பிடுவதில்லை. இது எனது திடீர் முடிவாக அமைந்து. மந்திக்குள்ளிருந்து ஏதோ ஒரு எண்ணம் உதித்ததால் இப்படி மாறினேன். இப்போது நான் லேசாகவும். சக்தியுடனும் இருப்பதாக உணர்கிறேன்” என்றார்.