மணிரத்னத்தின் உதவி இயக்குனர் இயக்கிய 40 நிமிட குறும்படம்மனம்

Manirathna Assitant Raammhendras Short Film Manam

by Chandru, May 30, 2020, 10:30 AM IST

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பல படங்களில் பணியாற்றியவர் ராம் மகேந்திரா. இவர் மனம் என்ற குறும்படம். தயாரித்து இயக்கியுள்ளார். சுமார் நாற்பது நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் லீலா சாம்சன், பரணிதரன்.


லீலா சாம்சன்,, ஓகே கண்மணி படத்தில் தனது இயல்பான அற்புதமான நடிப்பால் ரசிகர்க ளைக் கவர்ந்தவர். இக் குறும்படத்தின் கதையோட்டத்துடன் இணைந்து அவர் நடித்த விதத்தைப் பார்க்கும்போது ஒரு திரைப்படம் பார்த்த உணர்வே நமக்கு ஏற்படுகிறது.
இதில் நடித்த அனுபவம் குறித்து லீலா சாம்சன் கூறும்போது, “மணிரத்னம் சார் இயக்கத்தில் ''ஓகே கண்மணி' படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அதில் உதவி இயக்குநராக பணியாற்றிய ராம் மகேந்திரா எனக்கு அறிமுகமானார். மனம் குறும்படத்தின் கதையை அவர் எப்போது உருவாக்கினாரோ தெரியாது, திடீரென ஒருநாள் என்னிடம் இதில் நடிக்க முடியுமா? என்று கேட்டார்..

அனுதாபம் கலந்த அதேசமயம் ஒரு நல்ல கருத்தும் சொல்கிற கதையின் கரு ரொம்பவே பிடித்திருந்தது. மிகக் குறைந்த ஆட்களுடன் மிக நேர்த்தியாக இந்தக் குறும்படத்தை இயக்கியுள்ளார். ஒருவேளை இந்த கதாபாத்திரத்தில் அவர் எனக்கு முன் யாரையாவது நினைத்து வைத்திருக்கலாமோ என்னவோ..?ஆனால் இந்த கேரக்டர் என்னைத் தேடி வந்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி... இது ஒரு பெரிய குறும்படமாக உருவாகும் எனப் படப்பிடிப்பு சமயத்தில் எனக்குத் தெரியாது. கிட்டத்தட்ட பத்து நாட்கள் படப்பிடிப்பில் என் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினார்கள். ஒரு திரைப்படத்தை உருவாக்குவது போல அர்ப்பணிப்பு உணர்வுடன் இயக்குநர் ராம் மகேந்திரா உள்ளிட்ட படக்குழுவினர் செயல்பட்டனர். அதுதான் என்னை மிகவும் கவர்ந்தது.

மன்னிக்கும் மனம் வேண்டும். மற்றவர்களின் பிரச்சனைகளைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் வேண்டும். இதுதான் குறும்படம் சொல்லும் சேதி.இந்தச் சமயத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையைப் பார்த்தீர்களா..? இந்த கோவிட்-19 பாதிப்பால் அவர்களுக்கு நாம் உதவி செய்ய நினைத்தாலும் முடியவில்லை. நிறையப் பேருக்கு உதவிகள் போய்ச் சேரவில்லை. ரொம்ப சோகமான சூழ்நிலை இது. இதேபோல மக்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சோகமான சூழல் இருக்கும்.. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த குறும்படம் அதைத்தான் உணர்த்துகிறது.
இவ்வாறு கூறினார் லீலா சாம்சன்.

You'r reading மணிரத்னத்தின் உதவி இயக்குனர் இயக்கிய 40 நிமிட குறும்படம்மனம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை