ஜிகர்தண்டா ரீமேக்கில் தமன்னா..

Tamana Becomes A Part Of Jigarthanda Remake

by Chandru, Jun 1, 2020, 10:02 AM IST

டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் ஜிகர்தண்டா. 2014ம் ஆண்டு வெளியானது. சித்தார்த், பாபிசிம்ஹா. லட்சுமிமேனன் நடித்திருந்தனர். 6 வருடங்களுக்குப் பிறகு இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் நெகடிவ் ரோலில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளியிட்டிருந்த அவருக்குத் தேசிய விருது கிடைத்தது. இந்தியில் ரீமேக் ஆகும் இப்படத்தில் பாபி சிம்ஹா நடித்த நெகடிவ் ரோலில் அஜய்தேவ்கன் நடிக்கிறார். சித்தார்த் வேடத்தை ஃபரான் அக்தர் ஏற்கிறார். இதில் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார்.


தமிழ், தெலுங்கில் வெற்றிகரமான நாயகியாக இருந்தாலும் இந்தியில் தமன்னா வெற்றி பெறமுடியவில்லை. ஏற்கனவே அவர் நடித்த ஹம்சகல்ஸ், என்ட்ர்டெயின்மென்ட் ஆகிய படங்கள் தோல்வி அடைந்தன. பாகுபலி இந்தியில் வெற்றி பெற்றாலும் அது அங்கு டப்பிங் செய்யப்பட்டு வெளியானது ஆகும். இம்முறை தமன்னாவின் முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

You'r reading ஜிகர்தண்டா ரீமேக்கில் தமன்னா.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை