தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தொன்மை சிறப்பு மிக்க தமிழக கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைகளையும் ஊக்குவிக்கும் வகையில் இசைக்கருவிகள் ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கத் தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் ரூ 5 ஆயிரம் வீதம் 500 கலைஞர்களுக்கும், கலைக்குழு ஒவ்வொன்றுக்கும் பத்தாயிரம் வீதம் 100 கலைக் குழுக்களுக்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதி உதவி அளிக்கப்படும் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் விவரம்:தனிப்பட்ட கலைஞரின் *வயது 31. 3. 2020 தேதியில் 16 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
கலை குழுக்கள் தங்களது கலை நிறுவனத்தைப் பதிவு செய்திருத்தல் வேண்டும்.விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது. தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்பும் கலைஞர்கள் கலைக்குழுக்கள் சுய முகவரியிட்ட உரையில் ரூ10க்கான தபால் தலை ஒட்டி மன்றத்திற்கு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்
ஏற்கனவே 30. 4. 2020 வரை கால அவகாசம் அளிக்கப்பட அளிக்கப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது 30.6. 2020 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே 30.6.2020 செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணிக்குள் அல்லது அதற்கு முன்னரோ மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது விண்ணப்பங்களை நேரிலும் அளிக்கலாம்.இவ்வாறு இயல் இசை நாடக மன்றம் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது