நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்திவரும் அறக்கட்டளையில் பல்வேறு குழந்தைகள் தங்கிப் படித்து வருகின்றனர். அக்குழந்தைகளுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:எனது அறக்கட்டளை குழந்தைகள் அனைவரும் கொரோனா டெஸ்ட் முடிந்து எல்லோருக்கும் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்ததையடுத்து ஆசிரமம் திரும்பி வந்தனர். இதற்காக அமைச்சர் எஸ் பி வேலுமணி, மாநகராட்சி கமிஷனர் ஜி. பிரகாஷ் ஆகியோருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் எங்களுக்கு உடனடியாக இந்த உதவியை செய்தளித்தனர். மேலும் டாக்டர்கள், நர்ஸ்கள் ஆகியோரின் சுயநலமற்ற சேவைக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.
நான் எண்ணியபடியே எனது சேவைகள் தான் என் குழந்தைகளை காப்பாற்றி இருக்கிறது இதற்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சேவைதான் கடவுள்.இவ்வாறு ராகவா லாரன்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.