கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்தாலும் படத்தில் நடித்த திருப்தி அடைந்தவர் திரிஷா. கவுதம்மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் சிம்புவுடன் நடித்தார். மூவருமே அவரவர் வீட்டிலிருந்து பணியாற்றியது தான் இதில் ஹைலைட்.
இந்நிலையில் மை சுவீட் பாய் என்று இன்ஸ்டாகிராமில் திரிஷா ஒரு படம் வெளியிட்டிருக்கிறார். திரிஷாவின் மனதைத் திருடியது யார் என்று ஆவலோடு பார்த்த ரசிகர்கள் திரிஷா வீட்டு காம்பவுண்டுக்குள் ஒரு காகம் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்ததும், அதைப் படம் பிடித்துப் பகிர்ந்த திரிஷா தனது சுவீட் பாய் இவன் தான் என்று சொல்லி ரசிகர்களைக் கலகலப்பில் ஆழ்த்திவிட்டார்.