திரைப்பட இயக்குனர் ஷக்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
பொன்.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததை நான் பாரதிய ஜனதாவில் சேர்ந்துவிட்டதாக எழுதினார்கள்.
நான் புரட்சித் தலைவர் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கரங்களால் அடிப்படை உறுப்பினர் அட்டை பெற்று, இன்றைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, 'எனது உயிர் மூச்சு இருக்கும் வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டனாகவே தொடர்ந்து பணியாற்றுவேன். இது நிலைபாடு என இதன் மூலம் உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியிருக்கிறார்.